தொட்டிபாலத்தின் மேலிருந்து குதித்து +2 மாணவி தற்கொலை... தோழி விலகியதால் விபரீதம்!
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே குற்றியாறு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி தவமணி. இந்த தம்பதியருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களில் இளைய மகள் அபிநயா பேச்சிப்பாறை அரசு உண்டு உறைவிட பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் ஓணம் பண்டிகை விடுமுறை தினத்தையொட்டி அபிநயாவும், அவரது தோழியும் மாத்தூர் தொட்டிப்பாலத்துக்கு சென்றிருந்தனர். தொட்டிப்பாலத்தில் இருவரும் பாலத்தின் ஒரு முனையில் இருந்து மறுமுனை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த போது அவரது தோழியான கல்லூரி மாணவி முன்னே செல்ல அபிநயா செல்போனில் தோழியின் காதலனுடன் பேசிக்கொண்டே சென்றார். அப்போது திடீரென அபிநயா பாலத்தின் மேலிருந்து கீழே குதித்து தற்கொலைச் செய்துக் கொண்டதாக தெரிகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவட்டார் போலீசார் விரைந்து சென்று அபிநயாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு, மேற்கொண்டு விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில், அபிநயாவும், கல்லூரி மாணவியும் நெருங்கிய தோழிகளாக பழகி வந்துள்ளனர். கல்லூரி மாணவியின் பெயரை அபிநயா தனது கையில் பச்சைக்குத்தி உள்ளார்.

இந்நிலையில் கல்லூரி மாணவி வாலிபர் ஒருவரைக் காதலிக்க தொடங்கியதாக கூறப்படுகிறது. அதன்பின்பு அவர் அபிநயாவை விட்டு விலக தொடங்கினார். இது அபிநயாவுக்கு பிடிக்கவில்லை. அப்போது இளம்பெண்ணின் காதலருடன் செல்போனில் அபிநயா வாக்குவாதம் செய்த நிலையில் தொட்டிப்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அபிநயாவின் தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் உண்டா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
