வளர்ப்பு நாய் கடித்ததில் மாணவர் உயிரிழப்பு... அதிகாரிகள் விசாரணை!
ஈரோடு அருகே வளர்த்து வந்த நாய் கடித்ததில், முதலாமாண்டு கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளோடு அருகே உள்ள கனகபுரம் பகுதியைச் சேர்ந்த நாகராஜின் மகன் ரமேஷ் (19), தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தவர். வீட்டில் வளர்க்கப்பட்டிருந்த நாய், 10 நாட்களுக்கு முன்பு ரமேஷை கடித்ததாக கூறப்படுகிறது. சம்பவத்துக்குப் பிறகும் அவர் உடனடியான சிகிச்சை பெறவில்லை என தகவல்கள் வெளியானது.
இதையடுத்து கடந்த மூன்று நாட்களுக்கு முன் ரமேஷுக்கு உடல்நலம் சீராகாமல், தலைச்சுற்றல் மற்றும் அதிக காய்ச்சல் ஏற்பட்டதால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது. ஆனால் அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை.

ரமேஷை கடித்த வளர்ப்பு நாயை கடந்த சில நாட்களுக்கு முன்பு தெருநாய்கள் தாக்கியிருந்தது பின்னர் தெரிய வந்துள்ளது. இதனால் நாய் உடலில் நோய் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத்தினரும் உள்ளூர் மக்களும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
