அதிர்ச்சி... தேவாலய பிரார்த்தனையில் சரிந்து விழுந்து மாணவன் மரணம்!

 
மிலன் பால்

கேரள மாநிலம் காஞ்சிரப்பள்ளியில் உள்ள தேவாலயம் ஒன்றில், நேற்று பிப்ரவரி 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 11ம் வகுப்பு பயிலும் மாணவன், பிரார்த்தனை கூட்டத்தின் போது, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அனக்கல்ல் புனித அந்தோணியார் தேவாலயத்தில் நேற்று காலை 7 மணியளவில் நடைப்பெற்ற ஆராதனையின் போது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. பால் ஜோசப் என்பவரின் மகன் மிலன் பால் (16) அந்த திருச்சபையில் பலிபீட பையனாகவும் இருந்து வந்துள்ளார். 

மாரடைப்பு


11ம் வகுப்பு படித்து வந்த பால் ஜோசப் நேற்றைய பிரார்த்தனைக் கூட்டத்தின் போது, திடீரென சரிந்து கீழே விழுந்தார். அருகில் நின்றிருந்தவர்கள் உதவி செய்த போது, வாயில் நுரை தள்ளியபடி காணப்பட்ட பால் ஜோசப்பை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றும் காப்பாற்ற முடியவில்லை.

பாகிஸ்தான் ஆம்புலன்ஸ்

இறப்புக்கான காரணம் என்ன என்பது குறித்து இது வரை தெளிவாக அறிவிக்கப்படவில்லை. மிலன் காஞ்சிரப்பள்ளியில் உள்ள செயின்ட் அந்தோனி பப்ளிக் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பால் ஜோசப் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்குப் பின் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web