பெற்றோர் படிக்க சொன்னதால் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை... தொடரும் விபரீதங்கள்... !

 
ரஜினி

தற்காலத்து பள்ளி கல்லூரி மாணவர்கள் கேட்டதெல்லாம் கிடைக்க வேண்டும் என்ற மனோபாவத்தில் வளர்ந்து வருகின்றனர். இல்லையெனக் கூறினால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுகின்றனர். இதனால் பல நேரங்களில் விபரீத முடிவுகளை எடுத்துவிடுகின்றனர். பெற்றோர்கள், பெரியவர்களின் எந்த வார்த்தையையும், அவர்களின் சிரமங்களையும் கண்டுகொள்வதே இல்லை. 

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் வசித்து வருபவர்  ரஜினி. இவர்  பம்மதுகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட சரத் கண்டிகை பெஹனாயம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரஜினி. இவர் கட்டிட தொழிலாளி. இவரது மகன் சக்திவேல் (வயது 17. பொன்னேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இரவு சக்திவேல் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுக்குறித்து தகவல் அறிந்து வந்த செங்குன்றம் காவல் ஆய்வாளர் புருஷோத்தமன், துணை  காவல் ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

செங்குன்றம் அருகே துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு , கத்திகளுடன்  பதுங்கியிருந்த 6 பேர் கைது...

விசாரணையில் சக்திவேலுக்கு கல்லூரியில் படிக்க விருப்பமில்லை. வேலைக்குச் செல்ல விரும்புவதாகக் கூறப்படுகிறது. ஆனால் பெற்றோர்கள் அவரை கல்லூரிக்கு செல்ல வற்புறுத்தியதாக தெரிகிறது. விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டது காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web