விரட்டி விரட்டி கடித்த தெரு நாய்.. பள்ளிக்கு சென்ற மாணவனுக்கு நேர்ந்த சோகம்..!

 
ஜெயசூர்யா

5ம் வகுப்பு மாணவனை தெரு நாய் விரட்டி விரட்டி கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள நாகம்பட்டியை சேர்ந்தவர் ஜெயசூர்யா (10). இவர் 5ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இந்த சிறுவன் நேற்று கிராமத்தில் உள்ள பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது தெருநாய் ஒன்று விரட்டியது.

Vedasandur, Dindigul : வேடசந்தூர்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில்  ஆட்டோவில் கஞ்சா கடத்திய இருவர் கைது! | Public App

அப்போது செய்வதறியாது பதறி அடித்து ஓடிய சிறுவனை நாய் பிடித்து கடித்து குதறியது. இதில் மாணவனுக்கு இடுப்பு மற்றும் தொடையில் பலத்த காயம் ஏற்பட்டது.இதுக்குறித்து தகவல் அறிந்து வந்த சிறுவனின் பெற்றோர் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து மாணவனின் பெற்றோர் சிறுவனை வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

வேடசந்தூர்: அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக டாக்டர் லோகநாதன்  பொறுப்பேற்பு|Inshorts

அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'கிராமத்தில் தெருநாய்கள் அதிகம் உள்ளன. இதுவரை 10க்கும் மேற்பட்டோரை நாய் கடித்துள்ளது. எனவே, தெருநாய்களை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web