அம்மா அப்பா என்னை மன்னிச்சிடுங்க... நீட் தேர்வுக்குத் தயாரான மாணவர் கடிதம் எழுதி தற்கொலை !
உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்த முகமது அன்ஸ் (21), கான்பூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி நீட் தேர்வுக்குத் தயாராகி வந்தார். நேற்று மாலை அவர் தனது விடுதி அறையில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சில நேரம் கழித்து அறைக்கு சென்ற சக மாணவர் முகமதுவை தூக்கில் தொங்கிய நிலையில் கண்டதும், விடுதி நிர்வாகம் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தது. விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தற்கொலைக்குப் முன்னர் முகமது எழுதியிருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், “அம்மா, அப்பா என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் கனவை நிறைவேற்ற முடியவில்லை. வாழ்க்கையில் நான் சோர்வடைந்துவிட்டேன். எனது மரணத்திற்கு யாரும் பொறுப்பல்ல. குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கட்டும்” என எழுதியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கான்பூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
