பேருந்தை சிறைப்பிடித்து மாணவ மாணவிகள் போராட்டம்!!

திருச்சி மாவட்டம் மையம்பட்டி குமாரவாடி ஊராட்சி ஆனாங்கரைப்பட்டி பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதிக்கு தற்காலிகமாக பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் இயக்கப்படாததால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி மாணவ,மாணவிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
பள்ளி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், எடுத்துக் கூறியும் பல நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆத்திரமடைந்த பள்ளி மாணவ, மாணவிகள் திடீரென அரசு பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு நிலவியது.உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி பேருந்துகள் இயக்க விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதனையடுத்து மாணவ, மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!