மாணவர்கள் குஷி... இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... கலெக்டர் உத்தரவு!

 
இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!

இன்று ஆகஸ்ட் 2ம் தேதி திருச்சியை அடுத்துள்ள அரியலூர் மாவட்டத்திற்கு ராஜேந்திர சோழன் பிறந்தநாளை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.  தமிழகத்தில் அரசு விடுமுறை தினங்கள் மற்றும் பொது விடுமுறைகளை தவிர்த்து உள்ளூர் பண்டிகைகள், திருவிழாக்கள் அடிப்படையில் அந்தந்த மாவட்டத்தின் ஆட்சியர்கள் விடுமுறைகளை அறிவிப்பது வழக்கத்தில் இருந்து வருகிறது. அதன்படி, இன்று அரியலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சாவூர்

இன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து அரியலூர் மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப் போலவே இன்று அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

விடுமுறை
எனினும், முக்கிய அரசு அலுவலகங்கள், அரசு கருவூலங்கள் குறைந்த பணியாளர்களுடன் நாளைய தினம் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட்  மாதத்தில் பிறிதொரு நாள் பணி நாளாக செயல்படும் என  மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

 

From around the web