வெயிலில் சிமெண்ட் கலவை சுமந்த மாணவர்கள்.. அரசுப் பள்ளிகளில் அவலம்!!

தமிழகத்தின் பல பகுதிகளில் பகல் நேரங்களில் வெயில் கொளுத்தி வருகிறது . மழைக்காலம் இன்னும் சில நாட்களில் ஆரம்பிக்க இருக்கும் நிலையில் வெயிலின் தாக்கம் மட்டும் குறையவே இல்லை என மக்கள் புலம்பித் தவிக்கின்றனர். இந்நிலையில் பள்ளி மாணவர்களை உச்சி வெயிலில் சிமெண்ட் கலவை அள்ளச் சொன்ன அவலம் நடந்துள்ளது. இச்சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில் கட்டிட பணியில் சிமென்ட் கலவை சுமந்து செல்கின்றனர். இந்தப் பணியில் மாணவ, மாணவிகள் ஈடுபடுத்தப்பட்டது பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி 14வது வார்டு அதிபெருமனூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு ருகிறது. இந்நிலையில் இந்த பள்ளி வளாகத்தில் கட்டிட பணி நடந்து வரும் நிலையில் சிமென்ட் கலவையை கலந்து, அதனை தலை சுமையாகவும், கோணிப்பையிலும் அள்ளிச் செல்லும் பணியில் மாணவ, மாணவிகளை ஈடுபடுத்தியுள்ளனர்.
சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக சுட்டெரிக்கும் வெயிலில் இப்பணிகளை மாணவ, மாணவிகள் செய்து வந்ததாக கூறப்படுகிறது. தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளின் உத்தரவின்பேரில் இப்பணிகளை மாணவ, மாணவிகள் இதனை செய்ததாக கூறியுள்ளனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை தரம் உயர்த்த தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வரும் நிலையில் சுட்டெரிக்கும் வெயிலில் மாணவ, மாணவிகளை இதுபோன்ற வேலைகளை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!