ஆசிரியைக்கு மசாஜ் செய்த மாணவர்கள்.. அரசு பள்ளியில் அதிர்ச்சி வீடியோ!
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள பந்தப்பள்ளி அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், வகுப்பு நேரத்தில் மாணவிகள் ஆசிரியைக்கு மசாஜ் செய்ததாக வெளியான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளியான வீடியோவில், ஒரு ஆசிரியை நாற்காலியில் சாய்ந்து மொபைல் போனில் பேசிக்கொண்டிருக்கும் போது, அருகில் அமர்ந்திருந்த பள்ளி சீருடை அணிந்த மாணவிகள், அவரது தோள்கள் மற்றும் தலையில் மசாஜ் செய்து வருவது பதிவாகியுள்ளது. பள்ளியில் கல்வி நடைபெறும் நேரத்தில் இப்படியான பரபரப்பான காட்சி வெளியாகியதால் பெற்றோர்களும் பொதுமக்களும் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
At Bandapalli Girls Tribal Ashram School in Meliyaputti mandal, Srikakulam district, a teacher shamelessly made two young girl students massage her feet while she sat arrogantly talking on her cellphone. The disgraceful act, exposed belatedly, has enraged parents and locals.… pic.twitter.com/yTZqz9Rls8
— YSR Congress Party (@YSRCParty) November 4, 2025
சம்பவம் வைரலானதைத் தொடர்ந்து பள்ளிக் கல்வி துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளனர். விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு இடைக்கால இடைநீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி வளாகத்தில் இது எப்படி நடந்தது மற்றும் ஆசிரியர் ஏன் மாணவிகளை இவ்வாறு பயன்படுத்தினார் என்பதை தெளிவுபடுத்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவர்களின் நலனும் பள்ளி ஒழுங்கும் குலைக்கப்படும் வகையில் நடந்த இந்த செயலுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பள்ளி மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஆசிரியர் இத்தகைய செயலில் ஈடுபட்டிருப்பது ஏமாற்றத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
