அதிர்ச்சி வீடியோ.. கல்வி அதிகாரி காரை அடித்து நொறுக்கும் மாணவிகள்!!

அரசுப்பள்ளிகளில் குறைபாடுகளை தீர்க்க பெற்றோர் , ஆசிரியர்கள், மாணவர்கள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கல்வித்துறை அதிகாரி வாகனத்தினை கண்ட மாணவிகள் அதனை அடித்து நொறுக்கினர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பீகார் மாநிலத்தில் அரசுப் பள்ளியில் போதிய வசதிகள் இல்லாததைக் கண்டித்து கல்வித்துறை அதிகாரியின் வாகனத்தை மாணவிகள் அடித்து நொறுக்கினர். பல முறை கோரிக்கை வைத்தும், அதனை நிறைவேற்றாததால் ஆத்திரத்தில் மாணவிகள் வாகனத்தை சேதப்படுத்தியதாக மாணவிகள் ஒப்புக் கொண்டனர்.
"म्हारी छोरियां छोरों से कम है के"
— Mukesh singh (@Mukesh_Journo) September 12, 2023
ये दृश्य वैशाली के महनार ज़िले का है,जब छात्रा स्कूल में मूलभूत सुविधा नहीं होने की वजह से दुर्गा रूप में आ गयी .!
बीडीओ से लेकर पुलिस वाले तक कोई नहीं बच पाये.! #Bihar pic.twitter.com/7afh7G6nNE
பீகாரில் உள்ள வைஷாலி மாவட்டத்தில் உள்ள மஹ்னார் பிளாக்கில் உள்ள அரசு பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை எனத் தெரிகிறது. இதனால் மதன் சௌக் மற்றும் படேல் சௌக் இடையே மஹ்னார் என்ற ஊரில் மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது நடந்த பிரச்சனையில், அரசுப் பள்ளி மாணவிகள் கல்வித் துறை ஆய்வாளரின் வாகனத்தை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். கல்வித்துறை அதிகாரியின் வாகனத்தை மாணவிகள் கல்லை விட்டு எறிந்து அடித்து நொறுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு பெண் போலீஸ் அதிகாரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளை தாக்கினார். ஆத்திரமடைந்த மாணவிகள், கல்வி அதிகாரியின் காரை கையில் கிடைத்த கற்கள், பலகை, என சிக்கிய அத்தனையையும் எடுத்து காரின் கண்ணாடியை உடைத்தனர். மாணவிகளின் இந்த அதிரடி தாக்குதலால் அந்த இடமே போர்க்களமாகியது.
மாணவியை தாக்கிய பெண் போலீஸ் அதிகாரி உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரசு பள்ளியில், வகுப்பறைகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால் வகுப்பறையில் மாணவர்கள் உட்காருவதற்கு கூட இடமில்லை. இதனால் உட்கார இடமில்லாத மாணவர்கள் தான் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் பள்ளியை 2 ஷிப்டுகளாக நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வகுப்பறையில் உட்காருவதற்கு கூட இட வசதி இல்லாததற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவிகள் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனை தடுக்க வந்த போலீசார் போராட்டத்தை ஒடுக்குவதற்காக அதிகாரிகள் பள்ளி மாணவிகளை கன்னத்தில் அறைந்தனர். இதனால் தான் மாணவிகள் கல்வி அதிகாரியின் காரை மொத்தமாக அடித்து நொறுக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!