#BIG BREAKING : உயிரிழந்த விவசாயி சுக்ரன் சிங் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு... சகோதரிக்கு அரசு வேலை; முதல்வர் அறிவிப்பு!

 
சுப்கரன்சிங்

 பஞ்சாப் ஹரியானா விவசாயிகள்  பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் எனக் கோரி விவசாயிகள் 10 நாட்களாக டெல்லி எல்லையில் முகாமிட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் 4 கட்ட பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இதனையடுத்து விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய முயன்றனர். இவர்களை தடுத்து நிறுத்த போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு , தண்ணீர் பாய்ச்சுதல் , ரப்பர் குண்டு துப்பாக்கி சூடு நடத்தினர்.


இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் ரப்பர் குண்டு பாய்ந்து 21 வயதான இளம் விவசாயி சுக்ரன்   சிங் பலியானார். இவரது இறப்புக்கு நியாயம் கேட்டு விவசாயிகள் தற்காலிகமாக 2 நாட்கள் போராட்டத்தை ஒத்தி வைத்தனர். இருந்தபோதும் பதற்றநிலை நீடித்து வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் முதல்வர் போராட்டத்தில் உயிரிழந்த சுப்கரன் சிங் சகோதரிக்கு அரசு வேலை மற்றும் ரூ1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 

 

சுப்கரன்சிங்
பாரதிய கிசான் சங்கத்தின் துணைத் தலைவர் குருவேந்தர் சிங் பாலு உறுதிப்படுத்தினார். போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் சுக்ரன்   சிங் சிங் கொல்லப்பட்டதாகவும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.இந்தப் போராட்டத்தில் இதுவரை 3 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். 79 வயதான விவசாயி ஒருவர் திடீரென மாரடைப்பால் கடந்த 16ஆம் தேதி உயிரிழந்தார்பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் டிராக்டர்-ட்ராலிகள் மற்றும் லாரிகளுடன்  விவசாயிகள் ஷம்புவில் முகாமிட்டுள்ளனர்.
பஞ்சாப்  மற்றும் ஹரியானா விவசாயிகள் சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்.  விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், மின் கட்டண உயர்வு,   வழக்குகளை திரும்பப் பெறுதல் மற்றும் 2021 லக்கிம்பூர் கெரி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு "நீதி", நிலம் கையகப்படுத்துதலை மீட்டெடுத்தல் ,  2020-21ல் முந்தைய போராட்டத்தில் உயிரிழந்த   விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு என்பது உட்பட பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web