இந்தியா போராடி தோல்வி... சதம் அடித்து விளாசிய சுப்மன் கில்!!

 
இந்தியா வங்கதேசம்

ஆசியக்கோப்பை தொடர்  போட்டிகளில் இந்திய அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்நிலையில் இந்தியா வங்கதேச அணிகள் மோதின.  முதலில் பேட்டிங் செய்த வங்க தேச அணி வீரர்கள் இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். தொடக்க ஆட்டக்காரர்  லிட்டன் தாஸ் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார்.

இந்தியா வங்கதேசம்

தன்சித் ஹசன் 13 ரன்களிலும், அனாமுல் ஹக் 4 ரன்களிலும், மெஹிதி ஹசன் மிராஸ் 13 ரன்களிலும் அடுத்தடுத்து  ஆட்டமிழந்தனர். பின்னர் கேப்டன் ஷகிப் அல் ஹசன் மற்றும் டவ்ஹித் ஹ்ரிடோய் இருவரும் இணைந்து நின்று விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.50 ஓவர் முடிவில் வங்கதேசம் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு   265 ரன்கள் எடுத்திருந்தது.

இந்தியா வங்கதேசம்

தொடர்ந்து விளையாடிய இந்திய அணியில், கேப்டன் ரோகித் ஷர்மா ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். அடுத்து வந்த திலக் வர்மா 5, கே.எல்.ராகுல் 19,  இஷான் கிஷன்  அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.சுப்மன் கில் நிலைத்து ஆடி சதம் அடித்தார்.   இந்தியா 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியா   6 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web