சூப்பர்... 1000 பெண்கள், திருநங்கைகளுக்கு ஆட்டோ வாங்க 1,00,000 /- மானியம்!
தமிழகத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பெண் காவலர்களுக்கு ஒரு வருடம் மகப்பேறு விடுமுறை வழங்கப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பு பெண் காவலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அத்துடன் மகப்பேறு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு அவர்கள் விரும்பிய இடத்தில் பணி வழங்கப்படும்.
இந்நிலையில் தமிழகத்தில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு தமிழக அரசு ஆட்டோ வழங்க மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான அரசாணை வரும் வாரத்தில் வெளியாகலாம் எனத் தெரிகிறது. அதன்படி சுய தொழிலை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டம் 2022லேயே தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில் கடந்த வருடம் 500 பேருக்கு ஆட்டோ வாங்க ஒரு லட்ச ரூபாய் மானியம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மேலும் மேம்படுத்தும் வகையில் நடப்பாண்டிலும் ஆட்டோ வாங்குவதற்கு மானியம் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி பெண்கள் மற்றும் திருநங்கைகள் உட்பட 1000 பேருக்கு ஆட்டோ வாங்குவதற்கு ஒரு லட்சம் மானியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!