மருத்துவமனையில் திடீர் தீ விபத்து... 6 பேர் பலி!

 
ஜெய்ப்பூர்
 


 
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில்  இன்று அதிகாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.  இந்த தீ விபத்தில் நோயாளிகள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. அவசர சிகிச்சை பிரிவில் (ஐசியூ) ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 

ஜெய்ப்பூர்

ஐசியூவில் 11 நோயாளிகள் இருந்ததாகவும் பெரும்பாலானோர் கோமா நிலையில் இருந்ததால் முடிந்தவரை பல நோயாளிகளை ஐசியுவிலிருந்து மீட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நீண்ட நேரம் போராடியும் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை எனவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியது. உயிரிழந்த நோயாளிகளில், 2  பேர் பெண்கள், 4  பேர் ஆண்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?