ஓடும் பேருந்தில் திடீர் தீவிபத்து... 20 பேர் பலி, பலர் தீவிர சிகிச்சையில் !

 
பேருந்து
 

ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் நடந்த பயங்கரமான பேருந்து தீ விபத்தில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜோத்பூரை நோக்கி 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்தில் பின்புறம் திடீரென தீப்பற்றியதால், 19 பேர் பேருந்திலேயே எரிந்து உயிரிழந்தனர். மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். தீயில் சிதைந்து எரிந்த உடல்கள் அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளதால், டிஎன்ஏ மூலம் அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணமாக மின் கசிவு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. “பேருந்தில் அவசர கால வெளியேறும் கதவு இருந்திருந்தால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்,” என உள்ளூர் எம்.எல்.ஏ மஹந்த் பிரதாப் பூரி கூறியுள்ளார். “தரமற்ற வடிவமைப்பும் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றாததுமே அதிக உயிரிழப்புக்கு காரணம்,” என்றும் அவர் குற்றம் சாட்டினார். தீயணைப்பு துறை அதிகாரிகள், “நாங்கள் சம்பவ இடத்தை அடைந்தபோது பேருந்து முற்றிலும் எரிந்து சிதைந்திருந்தது,” என தெரிவித்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா சம்பவ இடத்துக்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்தார். காயமடைந்தோருக்கு சிறந்த சிகிச்சை வழங்கவும், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு உடனடி உதவி வழங்கவும் உத்தரவிட்டார். பிரதமர் நரேந்திர மோடியும் இரங்கல் தெரிவித்ததோடு, உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50,000 நிவாரண தொகையும் அறிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் மற்றும் பல அரசியல் தலைவர்களும் இந்த துயரச் சம்பவத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?