திடீர் உடல்நலக் குறைவு... தேமுதிக தலைவர் விஜய்காந்த் மருத்துவமனையில் அனுமதி! தொண்டர்கள் அதிர்ச்சி!
பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த், திடீர் உடல்நல குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொண்டை வலி இருப்பதாக கூறப்படுகிறது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் பொது நிகழ்ச்சிகளிலும், கட்சி நிகழ்ச்சிகளிலும் அதிகளவில் கலந்துக் கொள்வதைத் தவிர்த்து வந்தார்.
இந்நிலையில், இப்போது உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் உடல்நிலையைப் பரிசோதித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது வழக்கமான பரிசோதனை தான் என்றும், ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் தொண்டர்களுக்கு, விஜயகாந்த் உடல் நலன் குறித்து தேமுதிக அறிக்கை வெளியிட்டுள்ளது.
60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்
ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!
கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!