குட் நியூஸ்! ரயில் பயணங்களில் இனி வாட்ஸ்-அப் மூலம் உணவு ஆர்டர் செய்யலாம்!

 
ரயில்

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் எந்த திசையில் பயணித்தாலும் இனி ரயில் பயணங்களில் வாட்ஸ்-அப் மூலமாகவே உணவை ஆர்டர் செய்யலாம். நமது இருக்கைக்கே வந்து டெலிவரி செய்யப்படும். அண்மைக் காலமாக இந்திய ரயில்வே அதிரடி திட்டங்களை செய்து வருகிறது. ரயில்களின் வேகம் அதிகரிப்பு, நவீன வசதிகளுடன் குளிர்சாதன பெட்டி, வந்தே பாரத் ரயில் என அசத்தி வருகிறது. தற்போது பயணிகளுக்கும் மேலும் அம்சமான திட்டத்தை கொண்டுவர உள்ளதாக அறிவித்துள்ளளது.

அதாவது, ரயில் பயணிகள் இனி தாங்கள் இருக்கையில் இருந்துகொண்டு வாட்ஸ்அப் செயலியின் மூலமாக உணவு ஆர்டர் செய்யும் வசதியை தான் ரயில்வே விரைவில் அனைத்து வழித்தடத்திலும் அறிமுகம் செய்ய இருக்கிறது.

ரயில்

இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்ந்தெடுக்கப்பட்ட சில ரயில்களில் இ - கேட்டரிங் பிரிவில் வாட்ஸ் -அப் சேவையை அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் பயணச்சீட்டை முன்பதிவு செய்த வாடிக்கையாளருக்காக +91-8750001323 என்ற வாட்ஸ்-அப் எண் அனுப்பிவைக்கப்படும்.

அதன் மூலம் பயணிகள் தாங்கள் செல்லும் வழியில் உள்ள ரயில் நிலையங்களின் உணவகங்களைத் தேர்வு செய்து தேவையான உணவை முன்பதிவு செய்தால், உணவு இருக்கைக்கே வந்துவிடும்.

ரயில்

வாட்ஸ்அப் மூலம் உணவை பெறும் வசதி குறிப்பிட்ட ரயில்களில் மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது.வாடிக்கையாளரின் கருத்துக்களின் அடிப்படையில், மற்ற ரயில்களிலும் இந்த வசதி அமல்படுத்தப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஐஆர்சிடிசியின் இணையதளம் மற்றும் செயலி வாயிலாக நாள்தோறும் சுமார் 50 ஆயிரம் உணவுகள் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த தொழில் அதிக லாபம் தரும்

From around the web