சுப்மன் கில்லுக்கு டெங்கு... ரசிகர்கள் அதிர்ச்சி.. உலகக்கோப்பையில் இடம் பெறுவாரா?!

 
சுப்மன்கில்

இந்தியாவின் நட்சத்திர ஆட்டக்காரர் சுப்மன் கில்.  இவருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நடந்து வரும் உலகக் கோப்பை தொடர் போட்டிகளில் சுப்மன் கில் விளையாடுவாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது  அகமதாபாத்தில் நேற்று நடந்த இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை முதல் லீக் போட்டியில் நியூசிலாந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் பிரம்மாண்டமான வெற்றியை பதிவு செய்தது.

சுப்மன்கில்

இதையடுத்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 5வது லீக் போட்டி அக்டோபர்   8ம் தேதி சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்க இருக்கிறது.
  வார்ம் அம் அப் போட்டிக்காக திருவனந்தபுரம் சென்றிருந்த இந்திய அணி மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்காக இந்திய அணி சென்னை திரும்பியது. சென்னை வந்தது முதல் சுப்மன் கில் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்  இதன் காரணமாக அவர் டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில்   அவருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுப்மன்கில்

 பொதுவாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைய குறைந்தது 7 முதல் 10 நாட்கள் ஆகலாம்.  இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கில் விளையாட வாய்ப்பில்லை என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   அவருக்குப் பதிலாக தொடக்க வீரராக இஷான் கிஷான் களமிறங்கலாம் எனவும் தக்வல்கள் வெளியாகியுள்ளன.   

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web