உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கொலை!! அதிர்ச்சி...

 
ரேணு சின்ஹா

 உச்ச நீதிமன்ற பெண் வழக்கறிஞர் நிதின்நாத் சின்கா. இவர் நொய்டாவில் வசித்து வரும் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நொய்டா செக்டார்-30ல் உள்ள ஒரு பங்களாவில் நிதின் நாத் சின்காவும் அவரது கணவர்  ரேணு சின்காவும்  வசித்து வந்தனர். ரேணு சின்கா உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆவார். இவர்களின் மகன் வெளிநாட்டில் வசித்து வருகிறார்.  இந்நிலையில் ரேணு சின்கா, பங்களாவில் உள்ள குளியலறையில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில்  கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சின்ஹா

அப்போது ரேணு சின்காவின் கணவர் நிதின் நாத்தை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.  இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பங்களாவை விற்பனை செய்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக ரேணு சின்காவை அவரது கணவர் கொலை செய்திருக்கலாம் என   ரேணு சின்காவின் சகோதரர் குற்றம்சாட்டினார். அதன் அடிப்படையில் கணவர் நிதின் நாத் சின்காவை போலீசார் தேடினர்.  அவரது மொபைல் சிக்னலை ஆய்வு செய்தனர். அதில்   கடைசி லொகேசன் பங்களா எனக் காட்டியது.

டெல்லி போலீஸ்

இதனையடுத்து பங்களா முழுவதும் சோதனையிட்டனர். நிதின் சின்ஹா ஸ்டோர் ரூமில் மறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்ஹு  நிதின் நாத் சின்காவை போலீசார் கைது செய்தனர். அவர் சுமார் 36 மணி நேரம் அந்த அறையில் இருந்ததாக ஒப்புக் கொண்டார்.   பங்களாவை விற்பனை செய்யவேண்டும் என்று விரும்பிய நிதின் நாத், அதற்காக ஒருவரிடம் டோக்கன் அட்வான்ஸ் வாங்கி விட்டார். ஆனால்  இதனை  ரேணு சின்கா விரும்பவில்லை. இதனால் இருவருக்குமிடையே தொடர்ந்து சண்டைகள் நடந்து வந்தன. இறுதியில் ஆத்திரத்தில் அவர் கொலை செய்து விட்டதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web