அரசு விரைவு பேருந்துகளில் கூடுதல் கட்டணம்...? பயணிகள் குற்றச்சாட்டு... !

 
அரசு பேருந்து

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு பேருந்துகளின் கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன . அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் கீழ் 1,120 வழித்தடங்களில் அரசு  விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.  இயக்க செலவுகளை பொறுத்து  டிக்கெட் விலைகள்  நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன.   அந்த வகையில் சுங்கச்சாவடி கட்டண உயர்வு, டீசல் கட்டண உயர்வு மற்றும் டயர் உட்பட உதிரி பாகங்களின் விலை உயர்வு உட்பட  தொடர் விலையேற்றம் இவைகளுடன் தற்போது பேருந்து கட்டணமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.   தமிழர் பண்டிகையாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் சென்னை கோவை போன்ற பெருநகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டன.

அரசுப் பேருந்து

இதற்காக  விரைவு பேருந்துகளில் ரூ10 முதல் ரூ30  வரை கட்டணம் வசூலிக்கப்பட்டதாக பயணிகள் கூறியுள்ளனர்.  அதன்படி  சென்னையில் இருந்து சேலத்திற்கு அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளில்  பொங்கலுக்கு முன்பு வரை ரூ300   கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில்  ரூ310  வசூலிக்கப்பட்டது. இதேபோல் சேலம் நெல்லை இடையே ரூ425  ஆக இருந்த நிலையில்  ரூ 430 ஆகவும் , நெல்லை ஓசூர் இடையே ரூ590  ஆக இருந்த நிலையில் ரூ 600 ஆகவும் உயர்த்தப்பட்டது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பல்வேறு வழித்தடங்களில் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது என பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.  

அரசு பேருந்துகள்

இது குறித்து  அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் ” அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளில் கிமீ க்கு ரூ.1ம்,  குளிர்சாதனமில்லா வசதி கொண்ட பேருந்துகளில் படுக்கையில்   ரூ.1.50, குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளில் ரூ.2 ம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.  தற்போது  பல்வேறு வழித்தடங்களில் பயண தூரம் வேறுபாடு அடைந்து இருப்பதால்  அதற்கு ஏற்ப தற்போது கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு பேருந்து நிலையம் மாற்றப்பட்டதால்   30 கிலோ மீட்டர் வரை பயண தூரம் குறைக்கப்பட்டது.  மற்ற வழித்தடங்களில் பயண தூரம் வேறுபாடு அடைந்திருப்பதால் சில வழித்தடங்களில் பயண கட்டணம் மறு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது என  போக்குவரத்து அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web