வீடியோ.. அர்னால்டுக்கு கையில் அறுவை சிகிச்சை... ரசிகர்கள் அதிர்ச்சி!!

 
அர்னால்டு

'டெர்மினேட்டர்' படங்களால்  குழந்தைகளிடையே ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அர்னால்டு. இவருக்கு   குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.   இவர்  2019ம் ஆண்டு 'டெர்மினேட்டர் - டார்க் ஃபேட்' படத்தில் நடித்தார்.அந்த படப்பிடிப்பில்  அவருக்கு கை மற்றும் தோள் பட்டையில் காயங்கள் ஏற்பட்டன. படப்பிடிப்பு முடிந்து அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் சில காரணங்களால் அது ஒத்தி வைக்கப்பட்டது. 

இதனிடையே அர்னால்டு, குங் பியூரி-2 என்ற படத்தில் மிகவும் ரிஸ்க் எடுத்து சண்டை காட்சிகளில் நடித்திருந்தார். அதன்பிறகு கையில் அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.  இதனையடுத்து அர்னால்டு முழங்கையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.

அர்னால்டு

அவர் கையில் கட்டு போட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  விரைவில் நண்பர்களுடன் ஜிம்மில் விளையாட வருவேன், காத்திருங்கள் என  தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அர்னால்டுக்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இவர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும்  தெரிவித்து வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web