உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பரிந்துரை!
தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், தன் பதவிக் காலம் நவம்பர் 23-இல் முடிவடைவதை முன்னிட்டு, அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்ய காந்த்தை நியமிக்க மத்திய சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரைத்துள்ளார். மத்திய அரசு இந்த பரிந்துரையை ஏற்றதும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். பின்னர், குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
ஹரியாணா மாநிலம் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த சூர்ய காந்த், 1962 பிப்ரவரி 10 அன்று பிறந்தார். அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களில் முதல் தலைமை நீதிபதியாக இவர் வருவது குறிப்பிடத்தக்கது. 38 வயதில் ஹரியாணா அரசின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றிய அவர், 2004ஆம் ஆண்டு ஹரியாணா மற்றும் பஞ்சாப் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2018இல் இமாசலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், 2019 மே 24ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பொறுப்பேற்றார்.

சூர்ய காந்த் 15 மாதங்கள் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி, 2027 பிப்ரவரி 9 அன்று ஓய்வு பெறவுள்ளார். அரசமைப்புச் சட்டப் பிரிவு 370 நீக்கம், பேச்சு சுதந்திரம், ஊழல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பாலின சமத்துவம் உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்தவர் என்றும், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளிப்படுத்தவும், வழக்குரைஞர் சங்கங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு ஒதுக்கீடு வழங்கவும் உத்தரவிட்டது போன்ற தீர்ப்புகள் அவருடைய நீதித்துறைக் கடமையை வெளிப்படுத்துகின்றன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
