முதன் முறையாக சூர்யாவுடன் ஜோடி சேரும் நஸ்ரியா?!

நடிகர் சூர்யா தற்போது கங்குவா' படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தனது 43வது படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத் தயாரிப்பில் இப்படத்திற்கான இசை ஜி.வி. பிரகாஷ்.
இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஹீரோயின் தேர்வுக்கு நடிகை அதிதி ஷங்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது கதாநாயகியாக நஸ்ரியா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழில் 'நேரம், ராஜா ராணி' படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நஸ்ரியா. இவர் , மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி இருந்தார். தற்போது மீண்டும் நடிக்கலாம் என உறுதி செய்துள்ளார். இந்த படம் உறுதியாகும் பட்சத்தில் தமிழில் இவரின் ரீ-என்ட்ரி படமாக அமையும்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!