மனைவி மீது தீரா சந்தேகம்.. கள்ளக்காதலியுடன் சேர்ந்து கணவன் செய்த கொடூரம்.. அதிர்ச்சி பின்னணி!

உத்தரபிரதேச மாநிலம் படாவுன் மாவட்டத்தில் வசிக்கும் பெண் மீரா. இவரது கணவர் ஆகாஷ். சில ஆண்டுகளுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆனதில் இருந்தே ஆகாஷ் தனது மனைவி மீரா மீது சந்தேகம் கொண்டுள்ளார். மேலும், அவர் யாருடன் பேசுகிறார் என்பதை கண்காணிக்க செல்போனில் சிப் வைத்துள்ளார். மீரா தன் தோழியிடம் மட்டும் அவ்வப்போது பேசிக் கொண்டிருந்தார்.
இதற்கிடையில், சில மாதங்களுக்கு முன்பு ஆகாஷ் பூஜா என்ற பெண்ணை சந்தித்தார். இந்த பழக்கம் இருவருக்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கட்டத்தில் கள்ளக்காதலியுடன் சேர்ந்து வாழ திட்டமிட்ட ஆகாஷ், மனைவி மீராவை கொல்ல முடிவு செய்தார். அதன்படி சம்பவத்தன்று மனைவியை அவரது தாய் வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறினார்.
கணவரை நம்பிய மனைவி, கடந்த ஜூலை 28ம் தேதி தகாத உறவில் ஈடுபட்ட பூஜா, அவரது நண்பர் ரூபேந்திரன், கணவர் ஆகாஷ் ஆகியோர் சேர்ந்து கழுத்தை நெரித்துக் கொன்றனர். உடலை காட்டில் விட்டு சென்றனர். விசாரணையில் உண்மை வெளியானதால், மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா