பிரக்ஞானந்தாவுக்கு எஸ்யூவி கார்..ஆனந்த் மஹிந்திரா அதிரடி ட்வீட்!!

 
பிரக்ஞானந்தா

இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா உலகக் கோப்பை செஸ்  போட்டியில்   மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார். இதில்  முதல்  2  ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. இதனால்  டை பிரேக்கர் ஆட்டம் நடத்தப்பட்டது. இதில்   ரேபிட் முறையில் நடைபெற்ற 2  ஆட்டத்தின் முடிவில், உலகக் கோப்பை செஸ் சாம்பியன் பட்டத்தை மேக்னஸ் கார்ல்சன் வென்றார். அவருக்கு டப் கொடுத்த  பிரக்ஞானந்தா  2 ம் இடத்தை பெற்றுள்ளார்.  இறுதி  வரை  போராடி தோல்வியடைந்த பிரக்ஞானந்தாவுக்கு பலரும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.



அந்த வரிசையில்  தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்தை பதிவிட்டிருந்தார்.இந்த ட்வீட்டை பார்த்த பலரும் மஹிந்திராவின்   காரை பிரக்ஞானந்தாவுக்கு பரிசளிக்கலாம் என கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்ற ஆனந்த் மஹிந்திரா   செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எக்ஸ்.யூ.வி 400 இ.வி காரை, பரிசாக அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளர்.   இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரக்ஞானந்தாவுக்கு பலரும் மஹிந்திரா தார் காரை பரிசளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எஸ்யூவி கார்

வீடியோ கேம்களின் மோகம் அதிகரித்துள்ள போதிலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு செஸ் விளையாட்டை அறிமுகப்படுத்தி   இந்த விளையாட்டை தொடர அவர்களுக்கு ஆதரவளிப்பதை ஊக்குவிப்பதை விரும்புகிறேன். இது எலெக்ட்ரிக் கார்களைப் போலவே  சிறந்த எதிர்காலத்திற்கான முதலீடு. எனவே, பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எக்ஸ்.யூ.வி 400 இ.வி காரை பரிசளிக்க வேண்டும் என நினைக்கிறேன். பிரக்ஞானந்தாவின் பெற்றோர் நாகலட்சுமி, ரமேஷ்பாபு  இருவரும்  தங்கள் மகனின் ஆர்வத்தை வளர்த்து   அயராத ஆதரவை வழங்கியதற்காக  அவர்கள் நம் நன்றிக்கு உரியவர்கள்.” என பதிவிட்டுள்ளார்

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web