நடிகை திவ்யபாரதிக்கு இன்ப அதிர்ச்சி அளித்த ஜிவி.பிரகாஷ்... !

 
திவ்ய பாரதி

 2021ல் பேச்சிலர் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை திவ்ய பாரதி. இவர் தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்களால் பெரிதும் கவனம் ஈர்க்கப்பட்டார். இந்த  படத்தின் வெற்றியை தொடர்ந்து திவ்ய பாரதிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.    தற்போது  பரியேறும் பெருமாள் படத்தின் நாயகன் கதிருக்கு ஜோடியாக ஆசை என்ற படத்திலும் நடித்து வருகிறார்.  இந்த திரைப்படம்  இஷ்க் என்கிற மலையாள படத்தின் ரீமேக் ஆகும். இப்படி அடுத்தடுத்த படங்கள்   ரிலீசுக்கு காத்திருக்க,  திவ்ய பாரதி நடித்த ஜர்னி  வெப் தொடர்  வெளியாகி இருந்தது.  இந்த தொடர் தற்போது சோனி லிவ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.

திவ்ய பாரதி
 அத்துடன் கிங்ஸ்டன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.   இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்து வரும் திவ்யபாரதிக்கு பிறந்தநாள் சர்ப்பிரைஸ் அளித்துள்ளது படக்குழு.  கமல் பிரகாஷ்  இயக்கத்தில்  படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மற்றொரு புறம்  தெலுங்கில் கோட் என்கிற திரைப்படத்தில் ஹீரோயினாகவும் பிசியாக நடித்து வருகிறார் திவ்யா.  

திவ்ய பாரதி

நடிகை திவ்ய பாரதி நேற்று தனது  பிறந்தநாளன்றும் கிங்ஸ்டன் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இவருக்கு   இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்த  படக்குழுவினர் சர்ப்ப்ரைசாக கேக் வெட்டி கொண்டாடினர்.  ஜிவி பிரகாஷ் மற்றும் கிங்ஸ்டன் படக்குழு உடன் இணைந்து திவ்ய பாரதி பிறந்தநாள் கொண்டாடியபோது எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web