பாகிஸ்தானில் 58 ராணுவ வீரர்கள் பலி, 25 ராணுவ முகாம்களை கைப்பற்றியதாக தாலிபான் அறிவிப்பு!
பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் நடந்த கடும் மோதலில் 58 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்ததாகவும், 25 ராணுவ முகாம்களை கைப்பற்றியதாகவும் ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசு அறிவித்துள்ளது.
அண்மையில் காபூலில் நடந்த வான்வழி தாக்குதலுக்குப் பாகிஸ்தான் தான் காரணம் என குற்றம் சாட்டிய தாலிபான், அதற்குப் பதிலடி என எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. குனார், ஹெல்மண்ட் உள்ளிட்ட மாகாணங்களில் கடும் சண்டை வெடித்தது.

இந்த தாக்குதலில் பீரங்கிகள், வான்வழி ஆயுதங்கள் உள்ளிட்ட கனரக உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல். 58 வீரர்கள் பலியாகி, 30 பேர் காயமடைந்துள்ளதாக தாலிபான் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.
“ஆப்கானிஸ்தானின் இறையாண்மையைப் பாதுகாக்கும் நடவடிக்கையாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தான் மீண்டும் எங்கள் வான்வெளியை மீறினால், கடுமையான பதிலடி கொடுப்போம்,” என அவர் எச்சரித்தார்.

அதேசமயம், டூராண்ட் கோட்டிற்கு அருகே மோதல்கள் நடந்ததை பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தினாலும், தாலிபான் தங்கள் முகாம்களை கைப்பற்றியதாக கூறிய தகவலை அவர்கள் மறுத்தனர்.
தாலிபான் வெளியுறவு அமைச்சர் முத்தாகி தற்போது இந்தியா வருகை தந்துள்ள நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
