அட... சூர்யாவுடன் இணையும் தமன்னாவின் காதலர்..!!

 
சூர்யா விஜய்வர்மா

நடிகர் சூர்யாவின் 42 வது படமான  ‘கங்குவா’ படப்பிடிப்புக்கள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த திரைப்படம்   பான் இந்தியா படமாக உருவாகி வருவதால்,மற்ற படங்களில் நடிப்பது குறித்தும் அடுத்த படம் குறித்தும் அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. தன்னுடைய முழு  கவனத்தையும் ‘கங்குவா’ படத்தில் செலுத்தி வருவதாக படப்பிடிப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

சூர்யா 43


இந்நிலையில், சுதா கொங்கரா இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் அவரின் 43வது படம் குறித்தான தகவல்களும் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்கின்றன. அதன்படி நடிகை நஸ்ரியா மற்றும் துல்கர் சல்மான்  இருவரும்  சூர்யாவின் அடுத்தப்படத்தில் இணைவதாக கூறப்பட்டது.  

சூர்யா 43

இந்தப் படத்தில்  வில்லனாக நடிக்க நடிகை தமன்னாவின் காதலரும், பாலிவு நடிகருமான விஜய் வர்மாவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.  சூர்யா, நஸ்ரியா, துல்கர், விஜய் வர்மா என நட்சத்திர பட்டாளங்களின் பட்டியல் மாஸான படமாக இருக்கும். நிச்சயம் ரசிகர்களின் ரசனைக்கு தீனிபோடும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web