தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!
தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை இன்று (நவம்பர் 4) வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் மாவட்ட கல்வி அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விரிவான விவாதத்திற்குப் பின்னர் இறுதி முடிவு எடுக்கப்பட்டு அட்டவணை வெளியிடப்பட்டது.


அதன்படி, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11 முதல் ஏப்ரல் 6 வரை நடைபெறும். 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுத் தேதிகள், 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலை கருத்தில் கொண்டு நிர்ணயிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “தேர்தல் ஆணையத்துடன் ஆலோசித்து தேர்வுத் தேதிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. 12 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் தேர்வில் மாணவர்கள் கால்குலேட்டர் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படும். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன், உற்சாகத்துடன் தேர்வை எழுத வேண்டும்” என தெரிவித்தார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
