நாளை மீண்டும் கூடும் தமிழக சட்டசபை... பரபரப்பான அரசியல் சூழலில் தொடக்கம்!

 
சட்டசபை அமைச்சரவை

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி 6ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி, நான்கு நாட்கள் நடைபெற்றது. பின்னர் மார்ச் 14ஆம் தேதி 2025–2026ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, மறுநாள் வேளாண் பட்ஜெட்டும் சமர்ப்பிக்கப்பட்டது. இரு பட்ஜெட்டுகள் மீதான விவாதம் மார்ச் 17 முதல் 21 வரை நடைபெற்றது. தொடர்ந்து மார்ச் 24 முதல் ஏப்ரல் 29 வரை துறை வாரியான மானியக் கோரிக்கை விவாதங்களும் நடத்தப்பட்டன. பின்னர் தேதி குறிப்பிடாமல் அவை ஒத்தி வைக்கப்பட்டது.

சட்டப்பேரவை

அவை விதிகளின்படி ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு சட்டசபை மீண்டும் கூட வேண்டும். அதன்படி, தமிழக சட்டசபை நாளை பரபரப்பான அரசியல் சூழலில் மீண்டும் கூடுகிறது. கூட்டத்தின் தொடக்கத்தில் மறைந்த உறுப்பினர்களுக்கும், கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட உள்ளது. மேலும், சட்டசபை கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை தீர்மானிக்க அலுவல் ஆய்வுக்குழு இன்று காலை 11 மணிக்கு சபாநாயகர் அறையில் கூடுகிறது.

தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர்! சபாநாயகர் அப்பாவு விளக்கம்!

இந்த கூட்டத்தில் சட்டசபை கட்சித் தலைவர்கள் மற்றும் கொறடாக்கள் பங்கேற்கின்றனர். வரும் 15, 16, 17 தேதிகளில் மூன்று நாட்கள் அவை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத் தொடரில் காசா போர் நிறுத்தம் தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. மேலும், தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் வாதப்பிரசங்கங்களால் கூட்டம் காரசாரமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?