செப்.28ல் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் காஞ்சியில் திமுக பவள விழா பொதுக்கூட்டம்... கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அழைப்பு!
இந்த பவள விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க கூட்டணியில் உள்ள அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தி.மு.க.வின் 75வது ஆண்டு பவள விழா, பெரியார், அண்ணா ஆகிய தலைவர்களின் பிறந்தநாள் விழா என 3 விழாக்களையும் ஒன்றாக சேர்த்து திமுக. முப்பெரும் விழாவாக சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து திமுக பவளவிழா பொதுக்கூட்டம் வரும் செப்டம்பர் 28ம் தேதி நடைபெற உள்ளது. பவள விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வரும் 28ம் தேதி காஞ்சிபுரத்தில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் காஞ்சியில் பவள விழா பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்க கூட்டணியில் உள்ள அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் டெல்லி தலைமைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
