நாளை ராமநாதபுரம் செல்கிறார் முதல்வா் ஸ்டாலின்!
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை அக்டோபர் 2ம் தேதி வியாழக்கிழமை வருவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன.

ராமநாதபுரம் அருகேயுள்ள பேராவூா் பகுதியில் நடைபெற உள்ள விழாவில் முடிவுற்ற திட்டங்களைத் திறந்து வைப்பது, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது என தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த விழாவில் கலந்து கொள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை அக்டோபர் 2ம் தேதி ராமநாதபுரத்துக்கு வருகை தர உள்ளாா்.

முதல்வருக்கு மாவட்ட திமுக சாா்பில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட உள்ளது. முதல்வா் ராமநாதபுரத்தில் உள்ள அரசு விருந்தினா் மாளிகையில் ஓய்வு எடுக்கிறார். அதனைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை பேராவூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் வருகையையொட்டி உச்சபட்ச பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதி சுற்று வட்டாரங்களில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
