தமிழகமே பதறுது... நடிகர் விஜயகாந்த்துக்கு மீண்டும் தீவிர சிகிச்சை... தொண்டர்கள் அதிர்ச்சி!

 
விஜயகாந்த்

நடிகர் விஜயகாந்த் உடல் நலம் தேறி வந்த நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் கேப்டன் முழுமையாக குணமடைந்து நலமுடன் வீடு திரும்புவார் என்று பிரேமலதா கூறியிருந்தது தமிழகம் முழுவதும் விஜயகாந்த் ரசிகர்களை மட்டுமல்லாமல் பொதுமக்களிடையேயும் சந்தோஷ பெருமூச்சு விட செய்திருந்தது. இந்நிலையில் மீண்டும் அதிர்ச்சியாக நடிகர் விஜயகாந்துக்கு மீண்டும் மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

நடிகர் விஜயகாந்த்துக்கு ஆக்ஸிஜன் உதவியுடன் தீவிர சிகிச்சை அளித்து வருவதால் தொண்டர்கள் கலக்கத்தில் உள்ளனர். தமிழ் திரையுலகின் முண்ணனி நடிகரும், தேமுதிக தலைவருமான நடிகர் விஜயகாந்த்  கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால்   வீட்டிலேயே ஓய்வில் இருந்து வருகிறார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால்  வழக்கமான பரிசோதனைகளுக்காக  அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது.

விஜயகாந்த்

மழைக்காலம் தொடங்கியதுமே  வீட்டில் ஓய்வில் இருந்த விஜயகாந்துக்கு இருமல், காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்படத் தொடங்கின.   இதனையடுத்து நவம்பர் 18ம் தேதி  சென்னை கிண்டியை அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில்  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.   அவருக்கு சில நேரங்களில் சுயமாக சுவாசிப்பதில் சிரமம் இருந்து வருவதால்  செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருந்தது.

விஜயகாந்த்

 இந்நிலையில் விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. அவரை நுரையீரல் நிபுணர்கள் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.  தற்போது  அவருக்கு முழுவதுமாக ஆக்சிஜன் உதவியுடன் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகவலால் தேமுதிக தொண்டர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web