அசத்தல்.... பிடி உஷாவின் சாதனையை சமன் செய்த தமிழக வீராங்கனை!!

 
வித்யா ராம்ராஜ்

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் நடைபெற்று வரும் நிலையில் இதில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு சாதனை படைத்து வருகின்றனர். இந்தியா பதக்கங்களை வென்று குவித்து பதக்கப்பட்டியலில் 4 வது இடத்தை பிடித்துள்ளது. இன்று   400 மீட்டர் தடை தாண்டுதலில் 55.42 விநாடிகளில் இலக்கை அடைந்து வித்யா ராம்ராஜ் சாதனை  படைத்துள்ளார்.

வித்யா ராம்ராஜ்

மேலும் ஸ்பீட் ஸ்கேட்டிங் போட்டியில் 3000 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள்  கிடைத்துள்ளன. ஆரத்தி கஸ்தூரி ராஜ், ஹீரல், சஞ்சனா, கார்த்திகா ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.

வித்யா ராம்ராஜ்


ஆர்யன்பால், ஆனந்த், சித்தாந்த், விக்ரம் ஆகியோர் அடங்கிய ஆடவர் அணியும் வெண்கலப் பதக்கத்தைத் தட்டிப் பறித்துள்ளது.  இதன் மூலம் இந்திய  அணி மொத்தம் 55 பதக்கங்களை வென்று 4வது இடத்தில் உள்ளது. இதில் 13 தங்கம், 21 வெள்ளி, 21 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web