அக்டோபர் 14 முதல் தமிழகம், இலங்கை பயணிகள் கப்பல் சேவை தொடக்கம்!!

 
கப்பல்

தமிழகத்தில் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து  தொடங்கப்பட  உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் தற்போது பயணிகள் கப்பல் அக்டோபர் 14ம் தேதி இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.      150 பயணிகளுடன் இயக்கப்பட உள்ள இந்த  கப்பலின் கேப்டன் கொச்சின் பகுதியை சேர்ந்த 50 வயதான பிஜு பி.ஜார்ஜ். 25 கோடி ரூபாய் செலவில் சுமார் ஒரு வருடம் கொச்சினில் தயாரிக்கப்பட்ட இந்தக் கப்பல் கடலில் ஒரு மணிநேரத்தில்   36 கிலோ மீட்டர் வரை வேகத்தில் செல்லக்கூடியது.  

கப்பல்

இந்த  சொகுசு கப்பலில் பயணிகளுக்கு தேவையான சிற்றுண்டி, தேநீர், குளிர்பானங்கள், நொறுக்கு தீனிகள்கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  அத்துடன் குளுகுளு ஏசிவசதியுடன் கட்டமைக்கப்பட்டு உள்ள கப்பலில் பொழுதுபோக்கிற்காக 6 தொலைக்காட்சிகள்,  தமிழ், ஆங்கிலம், மற்ற மொழியினருக்கு தேவையான வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   ஆண்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தனித்தனியே கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.  ஆபத்து காலங்களில் உயிர் காக்கும் மிதவை படகுகள், மருத்துவ உபகரணங்கள், தீயணைப்பு கருவிகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கப்பல்

இந்நிலையில்   நாகை-இலங்கை இடையே நேற்று முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட   கப்பல் போக்குவரத்து நாளை புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.தற்போது இந்தக் கப்பல் சேவை மீண்டும் அக்டோபர் 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  முதலில்  அக்டோபர் 10 அடுத்து அக்டோபர் 12 என மாற்றியமைக்கப்பட்ட நிலையில்  மீண்டும் அக்டோபர் 14 என்பதில் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் “ மத்திய அமைச்சர்கள் கூடுதலாக  தொடக்க நிகழ்வில் கலந்து கொள்ள இருப்பதால் இந்த தேதி மாற்றம் . பயணிகள் மன்னிக்கவும்” என கப்பல் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web