பாமக இளைஞரணி தலைவராக தமிழ்குமரன் நியமனம்!
பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவராக ஜி.கே.எம். தமிழ்குமரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாமகவில் ஏற்பட்ட பிளவால் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் தனித்தனியாக அவர்களின் ஆதரவாளர்களை கட்சி நிர்வாகிகளாக நியமித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாமகவின் இளைஞரணி தலைவராக, கட்சியின் கெளரவத் தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரனை நியமித்து ராமதாஸ் வியாழக்கிழமை அறிவித்துள்ளார். விழுப்புரம் தைலாபுரத்தில் நியமனக் கடிதத்தை ராமதாஸுடன் இணைந்து அவரது மூத்த மகள் காந்திமதியும் தமிழ்குமரனுக்கு வழங்கியுள்ளார். இது குறித்து நிறுவனர் ராமதாஸ் தமிழ்குமரனுக்கு இளைஞரணி பதவி வழங்கப்பட்டதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், முகுந்தனுக்கு வழங்கப்பட்டது.

ஆனால், சொந்த சகோதரியின் மகனான முகுந்தன் நியமனத்துக்கும் அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். என்னை கொல்ல விரும்பியவருக்கு இளைஞரணியில் அன்புமணி பொறுப்பு வழங்கினார். தற்போது உலகத்தின் முன், தமிழ்குமரனுக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்குமரன் சிறப்பாக செயல்பட வாழ்த்துவோம்." எனக் கூறியுள்ளார். 2022 ம் ஆண்டு கட்சியின் தலைவராக அன்புமணி நியமிக்கப்பட்டபோது, இளைஞரணி தலைவராக தமிழ்குமரன் நியமிக்கப்பட்டார். மூன்றே மாதங்களில் அந்த பதவியில் இருந்து விலகுவதாக தமிழ்குமரன் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
