3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்... தேவர் ஜெயந்தி கொண்டாட்டம்!
ராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன்னில் அக்டோபர் 30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை நடைபெற உள்ளது. இந்த விழாவில் அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய அமைப்பினர், பொதுமக்கள் என பலர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ராமநாதபுரத்தில் 28, 29 மற்றும் 30 ஆகிய 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூடப்படும் என மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கவும், பொது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையிலும் மாவட்டம் முழுவதும் 3 நாட்களுக்கு டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என மாவட்ட கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
