இன்று டாஸ்மாக் கடைகள், பார்களுக்கு விடுமுறை!! குடிமகன்கள் அதிர்ச்சி!!

இன்று தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த சுதந்திர போராட்டத் தியாகி இம்மானுவேல் சேகரனின் 66 வது நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. அரசு சார்பில் அவரது நினைவிடத்தில் தலைவர்கள், பிரபலங்கள்,சங்கங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் பலர் அஞ்சலி செலுத்துவர். இதனை முன்னிட்டு அவரது நினைவகம் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அசம்பாவிதங்களை தடுக்கும் வண்ணம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் டாஸ்மாக் கடைகளுக்கும் இன்று விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது. . தமிழக அரசின் கட்டுப்பாட்டில் டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் மதுபானக்கடைகள் மற்றும் பார்கள் இயங்கி வருகின்றன. குறிப்பிட்ட சில நாட்கள் தவிர வருடத்தின் அனைத்து நாட்களும் திறந்திருக்கும். அந்த வகையில் தென் மாவட்டங்களில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த சுதந்திரப் போராட்டத் தியாகி இம்மானுவேல் சேகரனின் 66வது நினைவு நாள் நாளை செப்டம்பர் 11ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இதனையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை செப்டம்பர் 11ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த விடுமுறை தினத்தை ஈடுசெய்யும் வகையில் செப்டம்பர் 23ம் தேதி பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் , இமானுவேல் சேகரனார் நினைவு தினத்தை ஒட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு நாளைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்கள், கள்ளச்சந்தையில் விற்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!