இன்று டாஸ்மாக் கடைகளைத் திறக்க தடை... கலெக்டர் உத்தரவு!

 
மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள்!! தடுமாறும் குடிமகன்கள் !!

இன்று சூரசம்ஹாரம் நடைப்பெறுவதையொட்டி திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுக்க உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மதுபானம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா, கடந்த 13-ம் தேதி அதிகாலை யாக சாலை பூஜையுடன் தொடங்கியது. கந்தசஷ்டி திருவிழாவானது ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கடற்கரையில் இன்று மாலை நடைபெற உள்ளது. சூரசம்ஹாரத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால், திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

முருகன்

இதனால் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், நாளை திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மதுபானம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளை நாளை மூட மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மதுபான கடத்தல், பதுக்கல், விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web