ரூ.9,000 கோடி முதலீடு; 5000 பேருக்கு வேலைவாய்ப்பு... ராணிப்பேட்டையில் டாடா நிறுவனத்திற்கு அடிகல் நாட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின்!

 
டாடா மோட்டார்ஸ்

ரூ.9,000 கோடி முதலீட்டில் ராணிப்பேட்டையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா மோட்டர்ஸ் நிறுவனம் அமைக்க உள்ள  கார் உற்பத்தி ஆலைக்கு அடுத்த மாதம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   இந்நிறுவனத்தில் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

ஜாகுவார், லாண்டு ரோவர்
தமிழகத்தில் 2030ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இலக்கு நிர்ணயத்துள்ளார். அதனை நோக்கிய பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி, முதலீடுகளையும் ஈர்த்து வருகிறார். முதல்வரின் அமெரிக்க பயணத்தின் ஒரு பகுதியாக முதலீடு ஈர்ப்பதும் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
கடந்த ஜனவரி 7ம் தேதி சென்னையில் நடந்த உலகம் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6.64 லட்சம் கோடி அளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது. இந்நிலையில்,  ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டில் சுமார்  417 ஏக்கர் பரப்பளவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ்

இந்த தொழிற்சாலை அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.9000 கோடி முதலீட்டில் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் அமைக்க உள்ள நிலையில், தொழிற்சாலை அமைக்கும் பணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் அடிக்கல் நாட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
இந்த தொழிற்சாலையில் ஜாகுவார் லேண்ட் ரோவர் போன்ற உயர் ரக கார்களை தயாரிக்க உள்ளதாகவும், 50 சதவிகித உற்பத்தி டாடா நிறுவனத்தின் மின்சார வாகன கார்களைத் தயாரிப்பதில் ஈடுபட உள்ளதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web