10 ஆண்டுகளுக்கு டிடிஎப் வாசனின் ஓட்டுனர் உரிமம் ரத்து!!

 
டிடிஎப் வாசன்

பிரபல யூடியூபர்  டிடிஎஃப் வாசன் . இவர் சமூக வலைதளங்களில் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனம் ஈர்த்து வந்தார்.  வாசன் ரீல்சுக்காக  சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலு செட்டி சத்திரம் அருகே பைக்கில் சென்ற போது வீலிங் செய்ய முயற்சித்தார். இதில்  நிலை தடுமாறி கீழே விழுந்து கோரவிபத்தில் சிக்கினார். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில்   கவனக்குறைவாகச் செயல்பட்டதால் கோர விபத்து ஏற்பட்டது.  

டிடிஎப் வாசன்

டிடிஎஃப் வாசன் மீது ஏற்கனவே இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது. பிணையில் வர முடியாத பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து டிடிஎஃப் வாசன் 2  முறை ஜாமீன் கோரி காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

டிடிஎப் வாசன்

அந்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.  இதனையடுத்து டிடிஎஃப் வாசன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்துள்ளது  டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யும்படி  போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web