பெரும் சோகம்... கல்யாணமாகி ஒரு வருஷம் தான்... ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை.. !!

 
சுஜாதா

இன்றைய இளம் ஜோடிகளுக்கு திருமணம் செய்து கொள்வதிலிருக்கும் அவசரம் விட்டுக்க்கொடுப்பதில் கிடையாது. நான் பெரிதா நீ பெரிதா அதை நிரூபிக்க வேண்டும் என்ற மனோபாவத்துடன் தொடக்கம் முதலே இருந்து வருகின்றனர். என்னுடைய சந்தோஷம் தான் பெரியது. எதற்காகவும் பொறுத்துப் போக மாட்டென் என பிடிவாதமாக நினைப்பது இந்த சிந்தனை பல நேரங்களில் விபரீதங்களில் கொண்டு முடிகிறது. 

தூத்துக்குடி மாவட்டம் கால்டுவெல் காலனியில் வசித்து வருபவர் கணேஷ். இவர்  கப்பல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், சென்னை வியாசர்பாடியில் வசித்து வரும்  தங்கதுரை மகள் சுஜாதாவுக்கும் 2022  செப்டம்பரில் தான் திருமணம் நடைபெற்றது. சுஜாதா தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.  
திருமணம் ஆகி ஓராண்டாகியும் குழந்தை பிறக்கவில்லை. உறவினர்கள், அக்கம் பக்கத்தினர், நண்பர்கள் அனைவரும் சுஜாதாவிடம் இது குறித்து அடிக்கடி கேட்டததால் பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளார்.

தற்கொலை

இது குறித்து கணவனிடம் சண்டை போட்டு இருவருக்கும்   கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில்  கணேஷ் சுஜாதாவை வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறியுள்ளார்.   
இந்நிலையில் நேற்று இரவு கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் வீட்டில் தனித்தனி அறையில் தூங்கச் சென்றனர்.   காலை வெகுநேரமாகியும் வீட்டு வாசலில் கோலம் போடவில்லை. அக்கம்பக்கத்தினர்  இதற்காக கதவை தட்டியுள்ளனர்.  வெளியறையில் படுத்து இருந்த கணேஷ் எழுந்து உள்ளறையில் படுத்து இருந்த சுஜாதாவை கதவைத் தட்டி எழுப்பினார்.  

ஆம்புலன்ஸ்


ஆனால் கதவு திறக்கவில்லை.  இதனால் பயந்து போய் அக்கம் பக்கத்தினர் உதவியுடன்   கதவை உடைந்து உள்ளே சென்று பார்த்தார்.  சேலையில் தூக்கு போட்டு சுஜாதா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆசிரியை தற்கொலை குறித்து வழக்குபதிவு செய்யப்பட்டு   கணவர் கணேசிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே ஆண்டில்  கணவன் மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக   ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web