ரூ45000 சம்பளத்தில் ஆசிரியர் வேலை... உடனே அப்ளை பண்ணுங்க...!!

 
சைனிக்

மத்திய அரசின் சைனிக் பள்ளியில் ஆசிரியர், ஆய்வக உதவியாளர் உள்பட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது.ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் சார்பில் இந்தியாவில் பல இடங்களில் சைனிக் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் அமராவதிநகரில் உள்ள சைனிக் பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது.

பணியின் பெயர்: ஆசிரியர், ஆய்வக உதவியாளர், பேண்ட் மாஸ்டர், ஆலோசகர், பிஇஎம்/பிடிஐ-கம்-மேட்ரான்

காலி பணியிடங்கள்: 7 (ஆசிரியர் - 3, ஆய்வக உதவியாளர் - 1, பேண்ட் மாஸ்டர் - 1, ஆலோசகர் - 1, பிஇஎம்/பிடிஐ-கம்-மேட்ரான் - 1)

சைனிக்

கல்வித்தகுதி:

இயற்பியல் ஆசிரியர் - இந்த பணியை விரும்புவோர் இயற்பியல் துறையில் எம்எஸ்சி மற்றும் பிஎட் முடித்திருக்க வேண்டும்.

கணித ஆசிரியர் - இந்த பணிக்கு கணிதத்தில் பிஎஸ்சி-பிஎட் படித்திருக்க வேண்டும்.

ஆங்கில ஆசிரியர் - இந்த பணிக்கு ஆங்கிலத்தில் பிஏ, பிஎட் முடித்திருக்க வேண்டும்.

ஆய்வக உதவியாளர் - இந்த பணிக்கு 12ம் வகுப்பில் இயற்பியலை ஒரு பாடமாக படித்து முடித்திருக்க வேண்டும்.

பேண்ட் மாஸ்டர் - பச்மார்ஹி ஏஇசி பயிற்சி கல்லூரியில் பேண்ட் மாஸ்டர், பேண்ட் மேஜர், டிரம் மேஜர் படிப்பு அல்லது அதற்கு நிகரான கடற்படை, விமானப்படை படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

ஆலோசகர் - முதுகலை பிரிவில் சைக்கலாஜி, கிளினீக்கல் சைக்கலாஜி அல்லது சைல்ட் டெவலப்மென்ட் இல்லாவிட்டால் டிப்ளமோவில் கேரியர் கைடென்ஸ் அன்ட் கவுன்சிலிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பிஇஎம்/பிடிஐ-கம்-மேட்ரான் (பெண்) - இந்த பணிக்கு இடைநிலை படிப்பை முடித்து ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றிருக்க வேண்டும்.
 
வயது வரம்பு:

இயற்பியல் ஆசிரியர் - விண்ணப்பத்தாரர்கள் 21 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கணித ஆசிரியர் - விண்ணப்பம் செய்வோர் 21 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஆங்கில ஆசிரியர் - விண்ணப்பம் செய்வோர் 21 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஆய்வக உதவியாளர் - விண்ணப்பத்தாரர்கள் 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பேண்ட் மாஸ்டர் - விண்ணப்பத்தாரர்கள் 21 வயது முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஆலோசகர் - விண்ணப்பம் செய்வோர் 21 வயது முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பிஇஎம்/பிடிஐ-கம்-மேட்ரான் (பெண்) - விண்ணப்பத்தாரர்கள் 21 வயது முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

இயற்பியல் ஆசிரியர், கணித ஆசிரியர், ஆங்கில ஆசிரியர் - மாதம் ரூ. 45,000
ஆய்வக உதவியாளர் - மாதம் ரூ. 25,000
பேண்ட் மாஸ்டர் - மாதம் ரூ. 28,000
ஆலோசகர் - மாதம் ரூ. 30,000
பிஇஎம்/பிடிஐ-கம்-மேட்ரான் (பெண்) - ரூ. 22,000

விண்ணப்பிப்பது எப்படி?

மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோரில் அரசு விதிகளின்படி வயது தளர்வு என்பது வழங்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.sainikschoolamaravahinagar.edu.in எனும் இணையதளத்தில் விண்ணப்பம் டவுன்லோட் செய்து பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து Principal, Sainik School, Amaravathinagar, Pin - 642 102, Udumalpet Taluk, Tiruppur District என்ற முகவரிக்கு டிசம்பர் 26-ம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும்.
 
விண்ணப்ப கட்டணம்:

வேலை வாய்ப்பு

விண்ணப்ப கட்டணமாக ரூ.300 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் ரூ.200 செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணத்தை செலுத்துவது கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணைப்பில் விரிவாக கூறப்பட்டுள்ளது.

தேர்வு முறை:

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, திறனறி தேர்வு, நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.12.2023

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web