ரெக்கார்ட் நோட்டு எழுதாத மாணவி.. ஆத்திரத்தில் ஆபாசமாக திட்டிய ஆசிரியர் போக்சோவில் கைது..!

 
ஜெயராஜ்

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே தனியார் பள்ளி உள்ளது. இங்கு ஜெயராஜ் உயிரியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார். சில நாட்களுக்கு முன், அப்பள்ளியில் படிக்கும் ஒரு மாணவி   ரெக்கார் நோட் எழுதாமல் வந்துள்ளார். இதனால் ஜெயராஜ் மூங்கில் கட்டையால் மாணவி யை அடித்துள்ளார். மேலும் மாணவிக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் அவர் கையில் அடிக்கச் சொன்னார். அதற்கு, ஆசிரியர் இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.

அண்ணாச்சி போட்ட மாஸ்டர் பிளான்! திமுகவில் இணைந்த அதிமுக நகராட்சி சேர்மன்!  என்ன பின்னணி? | Tenkasi District Sengottai AIADMK Municipal President Rama  Lakshmi has joined DMK ...

இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் கூறினார். அவர்கள் பள்ளி நிர்வாகத்தை அணுகி புகார் அளித்தனர். அதன்படி, ஆசிரியர் ஜெயராஜை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. இதையடுத்து, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியரை மீண்டும் பணியில் சேர்க்கக் கோரி, அந்தப் பள்ளியில் படிக்கும் சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பள்ளி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

ஆனால், சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் மாணவர்கள் குழுவை உருவாக்கி, சம்பந்தப்பட்ட மாணவி குறித்து அவதூறாகப் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த மாணவி, பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து புகார் அளிக்க அவரது பெற்றோர் மற்றும் உறுவினர்கள் நேற்று பள்ளிக்கு சென்றனர். அப்போது, ​​திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆசிரியர் கிறிஸ்டோபர் என்பவரை மாணவியின் உறவினர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் செங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து அனைவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தென்காசி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் மாணவியின் பெற்றோர் மனு அளித்தனர். அதன்பேரில் தென்காசி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் ஜெயராஜை கைது செய்தனர்.

Family Opposes To Love Marriage,தென்காசி; திருமணம் செய்ய பெற்றோர்கள்  எதிர்ப்பு... காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் - couple seeks police  protection after family opposes to their ...

இதனிடையே, தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆசிரியர் கிறிஸ்டோபர் செங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவியை அவதூறாக பேசியதாக பள்ளி மாணவர்கள் 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web