ஆசிரியர் தின ஸ்பெஷல்.. தலைமை ஆசிரியருக்கு பண மாலை அணிவித்து கௌரவித்த மாணவி!
மதுரையில் ஆசிரியர் தினத்தையொட்டி பள்ளி தலைமை ஆசிரியருக்கு மாணவி ஒருவர் ரூ.5 மற்றும் ரூ.20 நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மதுரை செல்லூரில் அரசு உதவி பெறும் மனோகரா நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு, ஏழாம் வகுப்பு படிக்கும் உஷா என்ற மாணவி, ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இவரது பள்ளி முதல்வர் பால்.ஜெயக்குமார் அவர்களுக்கு ரூ.5 மற்றும் ரூ.20 நோட்டுகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும் பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பேனா மற்றும் சாக்லேட் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து மாணவி உஷா கூறுகையில், ""செல்லூர் பகுதியில் உள்ள ஏழை, எளிய குடும்பங்களுக்கு எனது பள்ளி தலைமை ஆசிரியர் தனது சொந்த செலவில் நோட்டு புத்தகம், உபகரணங்கள் அனைத்தையும் வழங்கி வருகிறார்.
மேலும், 40 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுப்பணியில் பணியாற்றி வரும் பள்ளி தலைமை ஆசிரியரின் தன்னலமற்ற சேவைக்கு நன்றி தெரிவித்து பண மாலை அணிவித்தேன்,'' என்றார். மாணவியின் இந்த செயல் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!