மாணவர்கள் அதிர்ச்சி... செப்டம்பர் 28 முதல் ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்!!

 
போராட்டம்

2009ம் ஆண்டுக்கு பின் நியமிக்கப்பட்ட, இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் பெரிய வேறுபாடு உள்ளதுசம வேலைக்கு சம ஊதியம் என்பதை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் நீண்ட காலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதில் எதிர்பார்த்த முடிவு எட்டப்படாததால் செப்டம்பர் 28ம் தேதி வியாழக்கிழமை முதல் வேலை நிறுத்தம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இன்று சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில்  செப்டம்பர் 28ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். 

இடைநிலை ஆசிரியர்கள்
திமுகவின், 311வது தேர்தல் வாக்குறுதியான, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். முதல் கட்டமாக சென்னையில், கோரிக்கை வெல்ல ஆயத்த மாநாடு நடத்தினர். இரண்டாவது கட்டமாக செப்டம்பர் 5ம்தேதி முதல் செப்டம்பர்  27ம்தேதி வரை கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரியும் அறவழி போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இடைநிலை ஆசிரியர்கள்


இந்நிலையில் செப்டம்பர் 28  முதல் பணியைப் புறக்கணித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.  இதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷாவுடன்  பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இன்று செப்டம்பர் 25ம் தேதி திங்கட்கிழமை சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை.  செப்டம்பர் 28ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டம்  திட்டமிட்டபடி நடைபெறும் என இடை நிலை ஆசிரியர்கள் சங்கத்தினர்  அறிவித்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web