பகீர் வீடியோ... 1000 அடி உயரத்தில் உடைந்த கேபிள் கார்!! சிக்கிக் கொண்ட ஆசிரியர்கள், மாணவர்கள்!!

 
ஹெலிகாப்டர்

பாகிஸ்தானின் வடமேற்கில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் சுற்று வட்டாரத்தில் பள்ளிகள் எதுவும் கிடையாது. இங்குள்ள நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் உள்ள அல்லாய் பள்ளத்தாக்கில் உள்ள கிராமத்தில் இருந்து   தாம்டோர் நகருக்கு செல்வதற்கு, 1000 அடி உயரம் உள்ள குல் தோக் கேபிள் காரில் பயணம் செய்து தான் பள்ளி செல்கின்றனர். வழக்கம் போல்  இன்று காலை அந்தரத்தில் கேபிள் கார் சென்று கொண்டிருக்கும் போது கேபிள் உடைந்து  கேபிள் கார் அந்தரத்தில் தொங்கியது.


இந்த கேபிள் காரில்  பயணம் செய்த 6 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் 1000 அடி உயரத்தில் கேபிள் காரில் சிக்கிக் கொண்டனர். இவர்களை  மீட்கும் பணியில் தற்போது ராணுவம் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. அந்தரத்தில் சிக்கிய மாணவர்கள் அனைவரும் 10 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் .மேலும், இந்த தகவல் வெளியானதை அடுத்து பாகிஸ்தானின் தற்காலிக பிரதமர் மீட்பு பணிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஹெலிகாப்டர்

அதே நேரத்தில்  ராணுவ ஹெலிகாப்டர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.   பலத்த காற்று வீசுவதால் மீட்பு நடவடிக்கைகளில் காலதாமதம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், இப்பகுதியில் போக்குவரத்து வசதிகள் கிடையாது. இதனால்  தினமும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கேபிள் கார் மூலம் பள்ளிக்கு ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என   உள்ளூர் பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web