வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை... கணவர் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு!

 
பாலியல் பலாத்காரம் செக்ஸ் இளம்பெண்

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் தலகட்டாபுராவில் உள்ள அவலஹள்ளியைச் சேர்ந்தவர் நவ்யா(28). இவரது கணவர் சைலேஷ். என்ஜினீயரான சைலேசுக்கும், நவ்யாவுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது. திருமணமான சிறிது காலம் 2 பேரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர்.

காதல்… கல்யாணம்… தனிக்குடித்தனம்!! இளம்பெண்ணை ஏமாற்ற முயன்ற VAO!! தர்ணாவில் இறங்கிய காதலி!!

திருமணத்தின் போது சைலேஷ் கேட்ட வரதட்சணையை நவ்யாவின் பெற்றோர் கொடுத்திருந்தனர். இந்த நிலையில் சைலேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து நவ்யாவிடம் கூடுதலாக வரதட்சணை கேட்டு வற்புறுத்தினர். இந்நிலையில் சம்பவத்தன்றும் நவ்யாவிடம் வரதட்சணை குறித்து கேட்டு சைலேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் துன்புறுத்தியதாக தெரிகிறது.

இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த நவ்யா வீட்டில் இருந்த படுக்கை அறைக்குள் சென்று மின்விசிறியில் தூக்கில் தொங்கினார். உயிருக்கு போராடிய அவரை சைலேஷ் மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு நவ்யாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

திருமணம்

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த நவ்யாவின் பெற்றோர், சைலேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தலகட்டாபுரா போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?