மாடியிலிருந்து விழுந்து மின்சாரம் தாக்கி இளம்பெண் மரணம்.. தவறி விழுந்தாரா? தற்கொலையா? போலீசார் விசாரணை!
புதுச்சேரி முதலியார்பேட்டை ஜெயம் நகரில் வசித்து வந்தவர் சுரேஷின் மனைவி சூர்யா (29). இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த ஒரு வருடமாக மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த சூர்யா, இதற்காக மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார். மருந்துகளும் தொடர்ந்து எடுத்துக் கொண்டிருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று மாலை வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த சூர்யா திடீரென எழுந்து வீட்டின் மாடிக்குச் சென்றுள்ளார். சில நிமிடங்கள் கழித்து அவர் மாடியிலிருந்து கீழே விழுந்து அருகில் சென்றிருந்த உயர் அழுத்த மின்வயர்களில் மாட்டிக் கொண்டார். இதனால் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த தகவலை அக்கம் பக்கத்தினர் முதலியார்பேட்டை காவல் நிலையத்திற்கு தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்த போலீசார் தீயணைப்பு மற்றும் மின்துறை அதிகாரிகளுடன் இணைந்து சூர்யாவின் உடலை மீட்டு, புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார், சூர்யா மாடியில் இருந்து தவறி விழுந்தாரா அல்லது மனஅழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த சூர்யாவின் உடலைக் கண்டு அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்த சோகம் அப்பகுதி மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
